SuperTopAds

57 வயதில் பெண் குழந்தைக்கு தந்தையான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்

ஆசிரியர் - Admin
57 வயதில் பெண் குழந்தைக்கு தந்தையான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், 57 வயது மற்றும் அவரது மனைவி கேரி 33 வயது, ஆகியோர் தமக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை ஒன்று லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்துள்ளதாக அவர்களது பேச்சாளர் ஒருவர் அறிவித்துளளார்.

தாய் சேய் இருவருவரும் நலமாக உள்ளார்கள். தேசிய சுகாதார சேவையின் கவனிப்பை பெரிதும் மதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தம்பதியினருக்கு இது இரண்டாவது குழந்தை ஆகும். முதலாவது மகன் வில்பிரட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிறந்து இருந்தார்.

பிரித்தானிய பிரதமர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர் என்பதுடன் தன் மூலம் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளது என்பதையும் கூற மறுத்தவர் ஆகும். இவரது இரண்டாவது மனைவி மரீனா வீலெர் ஒரு வழக்கறிஞர், இந்த திருமணம் மூலம் அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.