சேர்.பொன் இராமநாதனின் 91வது குருபூஜை தினம் யாழ்.பல்கலைகழகத்தில்..

ஆசிரியர் - Editor I
சேர்.பொன் இராமநாதனின் 91வது குருபூஜை தினம் யாழ்.பல்கலைகழகத்தில்..

யாழ்.பல்கலைகழகத்தின் மூலமான பரமேஸ்வரா கல்லுாரியின் ஸ்தாபரும், சைவ பெரு வள்ளலாருமான சேர்.பொன் இராமநாதனின் 91வது குரு பூசை தினம் இன்று காலை யாழ்.பல்கலைகழகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், 

சபா மண்டபத்தினுள் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தினார்.இந்நிகழ்வில், சேர். பொன் இராமநாதன் அறக்கட்டளையின் சார்பில் பேராசிரியர் சி. சிற்றம்பலம் 

மற்றும் முன்னாள் துணைவேந்தரும், பேரவை உறுப்பினருமான பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பதிவாளர் வி. காண்டீபன், இந்து கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் எம். வேதநாதன், 

முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு