வடமாகாண பாடசாலைகளில் முக கவசம் கூட அணியாமல் சில ஆசிரியர்கள்..! கல்வியமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..
வடமாகாண ஆசிரியர்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் மாணவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும். என மாகாண கல்வியமைச்சு அறிவுறுத்தியிருக்கின்றது.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமை உள்ளிட்ட சுசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கல்வியமைச்சு மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை சவக்காரம் இட்டுக் கழுவுதல் அல்லது தொற்று நீக்கியைப் பயன்படுத்தல் போன்ற சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பேணியவாறு
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சினால் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எனவே ஆசிரியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை உரியவாறு கடைப்பிடிக்கும் போதுதான் மாணவர்களும் பின்பற்றுவார்கள்.
அதற்கான அறிவுறுத்தல்கள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளது என்று சுகாதார அமைச்சு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
எனவே சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுவதன் ஊடாகவே மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.
அதேவேளை பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதனை நடத்துனர்கள் கண்காணிக்கவேண்டும். அவை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதனை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.