யாழ்.மாவட்ட கடற்கரைகளில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்று சிம்பன்ஸி குரங்கினுடையதா? நீதிமன்றுக்கும் தொியாமல் பொலிஸார் புதைத்தார்களா?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட கடற்கரைகளில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்று சிம்பன்ஸி குரங்கினுடையதா? நீதிமன்றுக்கும் தொியாமல் பொலிஸார் புதைத்தார்களா?

யாழ்.மாவட்ட கரையோரங்களில் இதுவரை 6 சடலங்கள் கரையொதுங்கியிருக்கும் நிலையில் 5 சடலங்களே பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 

முதலாவதாக வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரையில் கடந்த மாதம் 16ம் திகதி  கரையொதுங்கிய சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என கூறி பொலிஸார் புதைத்துள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரையொதுங்கிய சடலங்கள் யாருடையவை? என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாமல் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் மருத்துவர் என கூறப்படும் ஒருவரின் அறிவுறுத்தலில் 

மணற்காடு பகுதியில் கரையொதுங்கிய சடலம் சிம்பன்ஸி குரங்கின் சடலம் என கூறப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல.

இதேவேளை 5 சடலங்களே கரையொதுங்கியதாகவும், அவை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு