SuperTopAds

இந்தோனேசியா எரிமலை வெடிப்புச் சம்பவம்!! -பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு-

ஆசிரியர் - Editor II
இந்தோனேசியா எரிமலை வெடிப்புச் சம்பவம்!! -பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு-

இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியான ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை கடந்த சில தினங்களுக்கு முன் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது.

அந்த எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்ததால் எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. படுகாயம் அடைந்த 100க்கும் அதிகமானோரை மீட்புக்குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், எரிமலை வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தற்போது தெரிவித்துள்ளார்.


Radio