யாழ்.கல்லுண்டாய் - மானிப்பாய் வீதியில் விபத்து! ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாய் - மானிப்பாய் வீதியில் விபத்து! ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.மானிப்பாய் - கல்லுண்டாய் வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து கல்லுண்டாய் வீதி வழியாக சென்ற ஆட்டோ, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு