யாழ்.ஆரியகுளம் திறப்பு விழாவில் கண்டிய நடனம்! அதற்கும் எமக்கும் சம்மந்தம் இல்லை என யாழ்.மாநகர முதல்வர் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆரியகுளம் திறப்பு விழாவில் கண்டிய நடனம்! அதற்கும் எமக்கும் சம்மந்தம் இல்லை என யாழ்.மாநகர முதல்வர் தொிவிப்பு..

யாழ்.ஆரியகுளம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்றய தினம் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த திறப்பு விழாவில் கண்டிய நடனம் இடம்பெற்றமைக்கும் யாழ்.மாநகரசபைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. என கூறியிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், 

அவ்வாறான ஒரு நடன நிகழ்வை ஒழுங்கமைப்பு செய்தமைக்கும், அதன் பின்னால் நாக விகாரை விகாராதிபதி அழைத்து வரப்பட்டமைக்கும் யாழ்.மாநகரசபைக்கு தொடர்பில்லை. எனவும் முதல்வர் மணிவண்ணன் கூறியிருக்கின்றார். 

இதேவேளை மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஆகியோர் கண்டிய நடனத்துடன் அழைத்துவரப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள் வினவியபோதே முதல்வர் இதனை கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு