யாழ்.பருத்தித்துறை நீதிமன்ற முன்றலில் துப்பாக்கியை துாக்கி காட்டி ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை நீதிமன்ற முன்றலில் துப்பாக்கியை துாக்கி காட்டி ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

யாழ்.பருத்தித்துறை நீதிமன்றுக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். 

பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஊடகவியலாளருக்கு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளார். 

எனினும் முறைப்பாட்டை பதிவு செய்ய இழுத்தடித்து இருவரையும் சமாதானப்படுத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்துள்ளார். இதனையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீட்டினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அச்சு ஊடகம் ஒன்றின் செய்தியாளரான ஜெ.சுலக்ஸன் என்பவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. குறித்த பொலிஸ் அதிகாரி துப்பாக்கியை காண்பித்து பல பேர் முன்னிலையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன்,

தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் பேசியதாக கூறப்படுகின்றது. 

Radio