யாழ்.ஆரியகுளம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்பட்டது!
யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் “துாய நகரம், துாய கரங்கள்” கொள்கை வகுப்புக்கு அமைவாக தியாகி அறக்கொலை நிதியத்தின் நிதி பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஆரியகுளம் இன்று திறக்கப்பட்டது.
இன்று மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக தியாகந்திரன் அர்ச்சுனா
மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொண்டனர்.ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் நினைவுக்கல் மூன்று மொழிகளிலும் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துரு திரைநீக்கம் செய்யப்பட்டு,
ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது.ஆரியகுளத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை தன் செலவில் முன்னெடுத்த தியாகி அறக்கொடையின் நம்பிக்கை பொறுப்பாளர் வாமதேவா தியாகேந்திரனுக்கு
அறக்கொடை அரசன் எனும் நாமம் சூட்டி மாநகர சபையால் மதிப்பளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் வாண வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.மேலும்,மதத்தலைவர்கள்,
அரசியல் பிரமுகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.