யாழ்.நல்லுார் - கோவில் வீதியில் சமையல் எரிவாயு சிலின்டர் வயல் வெடித்து தீ பற்றியது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் - கோவில் வீதியில் சமையல் எரிவாயு சிலின்டர் வயல் வெடித்து தீ பற்றியது..!

யாழ்.நல்லுார் - கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த நிலையில் சமையல் எரிவாயு குழாய் வெடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என கூறப்படுகின்றது. சமையல் எரிவாயு சிலின்டர் வயர் வெடித்து எரிந்ததை வீட்டு உரிமையாளர் கண்டுள்ளார். 

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார்.

இதன்போது வர்த்தக நிலையத்திலிருந்தவர்கள் உடனடியாக ஓடிச் சென்று எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் சேதம் இன்றித் தப்பினர்.

இருந்தபோதும் சமையலில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பெரும் பதற்றத்திற்குள்ளான நிலையில் காணப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு