அமெரிக்காவிலும் கால் பதித்த ஒமைக்ரான்!!

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவிலும் கால் பதித்த ஒமைக்ரான்!!

உருமாறிய ஆபத்தான கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளில் பரவி வருவது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்தநிலையில், உலகை அச்சுறுத்தி வருகிற ஒமைக்ரான் வைரஸ், அமெரிக்காவிலும் நுழைந்து விட்டது.  ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து கலிபோர்னியா திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் இந்த வைரஸ் நுழைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு