முல்லைத்தீவு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய 26ம் திகதி கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய 26ம் திகதி கலந்துரையாடல்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து நடைபெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தவத ற்கான வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும், தமி ழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 26ம் திகதி சந்தித்து பேசவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் தமிழ் மக்களுக்கு சொந்தமான பெ ருமளவு நிலம் அபகரிக்கப்பட்டு அந்த நிலத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இ தன் தொடர்ச்சியாக மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிக ளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இது தொடர்பில் வடமாகாணசபையின் 120வது அமர்வில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கமைய கடந்த 10ம் திகதி வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் சுமார் 20ற்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்திருந்தனர். 

மேலும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்;கு வடமாகாணசபை உறுப்பினர்கள் நிலமைகைளை தெளிவுபடுத்தி திட்டமிட் ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும், சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த ம த்தியில் அழுத்தம் கொடுக்க கோரிக்கை விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைய 26ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபையின் 121வது அமர்வு நிறைவடைந்த பின்னர் மா லை 5 மணிக்கு வடமாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப் பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக மாகாணசபை உறு ப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. 

இவை தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீ வு மாவட்டத்திற்கு நேரில் விஜயம் செய்து உண்மை நிலமைகளை ஆராய்ந்துள்ளார்கள். இத ன் தொடர் நடவடிக்கையாகவே 26ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. .

இந்த சந்திப்பின் பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு