SuperTopAds

நல்லாட்சி அரசுக்கு எதிராக கடலில் இறங்கி போராடிய இரணைதீவு மக்கள்..

ஆசிரியர் - Editor I
நல்லாட்சி அரசுக்கு எதிராக கடலில் இறங்கி போராடிய இரணைதீவு மக்கள்..

இரணைதீவு பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி  மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இன்று (23) திங்கட்கிழமை நல்லாட்சி அரசுக்கு எதிராக இரணைதீவு மக்கள் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தி யுள்ளார்கள்.

இன்று காலை 7.30 மணி தொடக்கம் மக்க ள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி யுள்ளார்கள். இரணைதீவு மக்களுக்கு சொ ந்தமான நிலம் போருக்கு பின் கடற்படை யின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மக்களுடைய நிலம் மட்டுமல்லாமல் மக்க ளுக்கு சொந்தமான கால்நடைகள் தொட க்கம் பெருமளவான உடமைகளும் கடற்ப டையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமது காணிகளை விடுவிக் ககோரி கடந்த ஒரு வருடமாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த போராட்டத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இரணைதீவு மக்கள் இன்று கா லை கடலில் இறங்கி நல்லாட்சி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன்,

"இரணைதீவும் எமது வளங்களும் எம்மைவிட்டுப் பறிபோகும் மிக ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. அந்த வளங்கள் எமது மக்களால் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அங்கு நாம் மீள்குடியமரவேண்டிய மிக அவசர தேவை எழுந்துள்ளது" என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.