இந்தியாவின் மற்றுமொரு தாஜ்மஹால்!! -காதல் மனைவிக்காக பரிசளித்த கணவர்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவின் மற்றுமொரு தாஜ்மஹால்!! -காதல் மனைவிக்காக பரிசளித்த கணவர்-

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் சௌக்சே, தாஜ்மஹாலை போன்ற ஒரு வீட்டைக் கட்டி தனது காதல் மனைவிக்குப் பரிசளித்துள்ளார்.

4 படுக்கையறைகளுடன் கூடிய இந்த வீடு தாஜ்மஹாலின் முப்பரிமாணப் படத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 90 சதுர மீற்றர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு இரு தளங்களோடு நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் உள்ள சமையலறை, நூலகம், தியான அறை ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலையும், அதனை ஒத்ததாக இருக்கும் பீபி கா மக்பராவையும் நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து இந்த வீட்டை அவர் நிர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்கு 3 வருடங்களானதாக அதன் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். 


Radio