வீதியில் பற்றி எரிந்து பஸ்!! -குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலி-
பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வீதியில் பயணித்த பேருந்து தீப்பிடித்து எரிந்தத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பின் போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ் தெரிவித்தார். விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.