பைடனின் அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் கையளிப்பு!!
அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அவரது அதிகாரத்தை தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா தேவி ஹரிஸிடம் கையளித்துள்ளார் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சக்கி தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் தமது வழமையான மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ள நிலையில் இந்த அதிகாரம் உப ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
உப ஜனாதிபதி கமலா தேவி ஹரிஸ் தமது பணிகளை வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் மேற்கொள்வார் என வெள்ளை மாளிகையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.