SuperTopAds

இரணைதீவு மக்கள் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

ஆசிரியர் - Admin
இரணைதீவு மக்கள் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

கிளிநொச்சி -இரணைதீவை விடுவிக்கக் கோரி 359 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், இரணைமாதா நகரில், நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இரணைமாதா நகரில் உள்ள தேவாலயத்தில், காலை 7.30 மணிக்கு ஒன்றுகூடவுள்ள இரணைதீவு மக்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பின்னர், தற்போது போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரணைமாதா கடற்கரையில், கண்டன உரைகளையும் நிகழ்த்தவுள்ளனர்.

பொதுஅமைப்புகள், பல்கலைக்கழக அமைப்புகள் உட்பட சகல தரப்பினருக்கும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென, இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

1992ஆம் ஆண்டு பூர்வீக நிலமான இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், பூநகரி, முழங்காவில் இரணைமாதா நகரில் குடியேறினர். போர் நிறைவுக்கு வந்து இரணைமாதா நகரில், இரணைதீவு மக்கள் தற்போது வசித்து வந்தாலும், தமது பூர்வீக நிலமான இரணைதீவில் குடியேறவும் கடற்றொழில் புரியவும் அனுமதிக்க வேண்டும் என, கடந்த 358 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.