SuperTopAds

இராணுவத்தின் வசம் உள்ள காணிகள் தொடர்பில் தவறான தரவுகளே கூறப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தின் வசம் உள்ள காணிகள் தொடர்பில் தவறான தரவுகளே கூறப்படுகிறது..

மன்னார் மாவட்டத்தில் படையினர்வசம் உள்ள மக்க ளின் காணிகள் குறித்து தவறான தரவுகள் வெளியி டப்படுவதாக கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநா தன், சர்வதேச நெருக்கடியில் இருந்து தப்பிக்க இவ் வாறு செய்யப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியு ள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற  உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,

மன்னார்  மாவட்டத்தினில் தற்போது  படையினர் வசம்  தமிழ் மக்களிற்குச் சொந்தமான 2  ஆயிரத்து 391  ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் கடந்த 17ம் திகதி  ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் பிறிதொரு அமைச்சின் கீழ் வரும் தேசிய  நல்லிணக்க செயலணியோ  3 ஆயிரத்து 294  ஏக்கர் நிலங்கள்  உள்ளதாக கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.

அவ்வாறு தேசிய  நல்லிணக்க செயலணி வெளியிட்டுள்ள தகவலில் இராணுவத்தினர் வசம் 20.45 ஏக்கர் தனியார் காணிகளும்  ஆயிரத்து 942.27 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் 101  ஏக்கர் தனியார் கானியும் ஆயிரத்து 3 ஏக்கர் அரச காணிகளும் உள்ளதாகவும்  இதேபோன்று விமானப் படையினர் வசம் தனியார் காணி இல்லாத நிலையில்  227 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் 3 ஆயிரத்து 294  காணிகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இரு அமைச்சுக்களும் முரண்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிடும் நிலையில்  வட மாகாணத்தின் 5 மாவட்டத்திலும் சுமார் 65 ஆயிரம் ஏக்கர்   நிலங்களை விழுங்கி நிற்கும் படையினர்  மன்னார்  மாவட்டத்திலும்  அதிகநிலங்கள் இன்றுவரை படைகள் வசமே உள்ளது. 

அந்த வகையில் மன்னார்  மாவட்டத்தினில் சன்னார் பகுதியில் 3 ஆயிரத்து 500 ஏக்கரில் பாரிய பயிற்சி முகாமும் வெள்ளாங்குளத்தில் ஆயிரம் ஏக்கர் பண்ணையும் உள்ளது. இதேபோல் இதேபோல் முள்ளிக்குளம் என மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரத்திற்கும் அதிக நிலம் முப்படையினர் வசமே உள்ளது.

இதில்  பாரிய படை முகாம்களாக 5 நிலையங்கள் உள்ளன.  இவைகளின் அளவுகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே  மூடி மறைக்கப்பட்டு ஓ மாவட்டத்தின் உண்மை நிலையே மூடி மறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூடி மறைத்து சொற்ப அளவை கான்பிப்பதன் மூலம் வெளிநாடுகளை ஏமாற்றும் முயற்சி என்பது குறித்த கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் மூலமே உறுதியாகின்றது. என்றார்.