327 இலங்கை தமிழர்களுக்கு சுவிஸில் அரசியல் தஞ்சம்!!
சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு அந்நாட்டு அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸாரினால் உயிர் அச்சுறுத்தல் மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுவிஸ் அரசாங்கத்திடம், குறித்த இலங்கையர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் தஞ்சம் பெற்ற நபர்கள் யார் என்பதை அந்நாட்டு அரசு இதுவரையில் தகவல் வெளியிடவில்லை.
.