கனடாவில் தமிழர் ஒருவர் மீது எதிராக 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!!
கனடா - டொராண்டோவில் வசிக்கும் 36 வயதான தமிழர் ஒருவருக்கு எதிராக 93 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இணைய மூலம் சிறுவர்களிடம் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றதாக குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி அவருக்கு எதிராக 25 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் 68 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த நபர் மீது தற்போது 93 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.