வெளிவிவகாரச் செயலாளருடன் அமெரிக்க உயர் அதிகாரி சந்திப்பு!

ஆசிரியர் - Editor I
வெளிவிவகாரச் செயலாளருடன் அமெரிக்க உயர் அதிகாரி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங்கிற்கும் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகைதந்திருப்பதுடன் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரகாரம் நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை சந்தித்துள்ள கெல்லி கெய்டர்லிங், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் அதன் நீண்டகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இதன்மூலம் அபிவிருத்தி செயற்றிட்டங்கள், இருநாடுகளினதும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள், கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலின் பின்னரான மீட்சி ஆகிய விடயங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு