பதற்றங்களுக்கு மத்தியில் பைடன் - ஜின்பிங் இடையில் திடீர் சந்திப்பு!!
அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனும் சீனா நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் நேற்றைய தினம் தமக்கு இடையிலான முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.
தாய்வான், ஹொங்கொங் மற்றும் பீஜிங்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் மேற்குப் பகுதியான சின்ஜியாங்கில் முஸ்லிம்களை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களால் இரு நாடுகளின் உறவு மோசமடைந்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் காணொளி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.