கனடாவில் கடும் மழையால் ஒரு நகரமே மூடப்பட்டது!! -ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு-
மேற்கு கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் அங்குள்ள பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பல வீதிகள் மூடப்பட்டன.
மேலும் அங்கு எழுந்துள்ள ஆபத்து நிலையை அடுத்து ஒரு நகரத்தைச் சேர்ந்த மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதியூடாகச் செல்லும் எண்ணெய்க் குழாய்கள் மூடப்பட்டன.
வான்கூவருக்கு வட-கிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மெரிட் நகரமே இவ்வாறு மூடப்பட்டு அங்கு வசிக்கும் சுமார் 7,100 பேரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர்.