ஈக்குவடோரின் சிறைக் கலவரத்தில் 68 கைதிகள் பலி!
ஈக்குவடோரின் குயாஸ் மாநிலத்திலுள்ள சிறையில் நேற்று முன்தினம் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈக்குவடோரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறையில் நேற்று முன்தினம் இருதரப்பு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் சிறை வளாகம் கலவர பூமியாக காட்சி அளித்தது.
இந்த கலவரத்தில் 68 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.