SuperTopAds

பசிலின் வரவுசெலவுத் திட்டம் - துண்டுவிழுகிறது 1,628 பில்லியன் ரூபாய்!

ஆசிரியர் - Admin
பசிலின் வரவுசெலவுத் திட்டம் - துண்டுவிழுகிறது 1,628 பில்லியன் ரூபாய்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்றுபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  குறித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய இம்முறை எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 2,284 பில்லியன் ரூபாவாகும்.  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, மதிப்பிடப்பட்ட மொத்த செலவினம் 3,912 பில்லியன் ரூபாவாகும்.  இதன்படி, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ரூபா 1,628 பில்லியன் அல்லது 8.8% ஆகும்.

 புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

 அரச நிறுவனங்களின் தொலைபேசி செலவீனங்கள் நூற்றுக்கு 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

 பாராளுமன்ற ஓய்வூதியம் கிடைக்கப்பெற வேண்டுமாயின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக 10 வருடங்கள் கடமையாற்ற வேண்டும்.இதில் ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.

 அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைப்பு.

 15 சதவீதமாக இருந்த வர், 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களில் இந்த வரி அறவிடப்படும்.  நுகர்வோரிடம் இருந்து அதிகரிக்கப்படமாட்டாது.

 அரச ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பு.

 ஒரு சிகரட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு.  இதன்மூலம் 8 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆசிரியர்-சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.