அமெரிக்காவுடன் மோதினால் வடகொரியா அழிந்துவிடும் !- ஐ.நா. தூதுவர் நிக்கி ஹேலி
வடகொரியா போரைத் தூண்டும் விதமாக நடந்துகொள்கின்றது என்றும் அமெரிக்காவுடன் மோதினால் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி கூறினார்.
கண்டம் விட்ட கண்டம் பாயக்கூடிய சக்தி வாய்ந்த புதிய ஏவுகணையை வடகொரியா செவ்வாய்க்கிழமை விண்ணில் பறக்கச்செய்து சோதனை மேற்கொண்டது.
அந்த சோதனையின்போது விண்ணில் 1000 கிலோமீற்றர் பறந்த ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது.
இந்த சோதனை மூலம் அமெரிக்க தலைநகர் வா~pங்ரன் மற்றும் நியூயோர்க் நகரை குறிவைத்து தாக்கும் திறனைப் பெற்றதாக வடகொரியா கூறியது.
புதிய ரக ஏவுகணையில் அணுஆயுதம் பொருத்தி தாக்குதல் நிகழ்த்த முடியும் என்றும் தெரிவித்தது.
மேலும் இந்த சோதனைகளை அடுத்து வடகொரியாவை அணுஆயுத நாடாக கருதவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச பதற்ற நிலையை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
இந்த நிலையில் வடகொரியா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்ப சபை கவுன்சிலின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் பேசியது ;
வடகொரியாவின் புதிய ரக ஏவுகணை சோதனையானது உலகை யுத்தத்தின் விளிம்புக்கு கொண்டுவந்துள்ளது. அந்நாட்டின் செயல் போருக்கான அறைகூவலாக உள்ளத.
போரைத் தூண்டுவதற்காகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர் மூண்டால் இது போன்ற சோதனைகள்தான் அதற்குக் காரணமாக இருக்கும்.
வடகொரியாவுடன் அமெரிக்கா போரிட விரும்பியதில்லை. இப்போதும் விரும்பவில்லை. ஆனால் இந்த ஏவுகளை சோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதினால் வடகொரியா முற்றிலும் அழிந்துவிடும்.
வடகொரியாவுடன் உலக நாடுகள் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.
ஐ.நா ஏற்கனவே விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றுலுமாக செயல்படுத்தவேண்டும் . அந்த நாட்டுடனான ராணுவ வர்த்தக தொழில்நுட்ப ஒத்தழைப்பை அனைத்த நாடுகளும் கைவிடவேண்டும்.
அந்த நாட்டிலிருந்து எந்தப் பொருளையும் இறக்ககுமதி செய்யவோ அந்த நாட்டுக்|க எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்யவோ கூடாது.
வெளிநாடுகளிலுள்ள அனைத்து வடகொரிய பணியாளர்களையும் விஞ்ஞானிகள் அனைவரையும் வெளியேற்றி அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும்.
ஐ.நா இதற்கு முன்னர் பல கட்டங்களாக பொருளாதாரத் தடைகளை விதித்தபோதிலும் மேலும் மேலும் சக்திவாய்ந்த புதிய ஏவுகணைகளை வடகொரியா சோதித்து வருகிறது.
அடுத்ததாக குவிக்கத் வடகொரியா திட்டமிட்டு வருகிறது. இதனை தடுத்த நிறுத்தவேண்டும் என நிக்கி ஹெலி பேசினார்.