ஈராக் பிரதமரை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல்!!
ஈராக் நாட்டின் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியை கொலை செய்யும் நோக்குடன் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டை இலக்குவைத்து இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிரதமரின் காயங்கள் ஏதுமின்றித் தப்பித்துள்ளார்.
இருப்பினும் குறித்த தாக்குதலில் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், தலைநகரின் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள பிரதமரின் இல்லம் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.