ஓடும் ரயிலில் திடீர் கத்திக் குத்து!! -ஜேர்மனியில் மூவர் காயம்-
ஜேர்மனி நாட்டின் பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த அதிவிரைவு ரயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 27 வயது சிரிய இளைஞரை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை சுமார் 9 மணிக்கு இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.