கிளிநொச்சி மாவட்டத்தில் 600 குளங்கள் உள்ளபோதும் 44 குளங்களே விவசாயத்திற்கு பயன்படுகிறது..

கிளிநொச்சி மாவட்டத்தில் 600 வரையான சிறுகுளங்கள் காணப்பட்டாலும் இதில் 44 வரையான சிறிய குளங்கள் மாத்திரமே நீரப்பாசனம் செய்து விவசாயம் செய்யக்கூடிய குளங்களாக காணப்படுகின்றன என மாவட்ட கமநலஅபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் தவிர கமநலசேவை நிலையங்களின் கீழ் 600 இற்கும் மேற்பட்ட குளங்கள் காணப்படுகின்றன.
இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த மாவட்டகமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் கிளிநொச்சி மாவட்டத்தைப்பொறுத்தவரையில் 600 வரையான சிறுகுளங்கள் காணப்பட்டாலும் 44 வரையான குளங்கள் மாத்திரமே நீர்ப்பாசனம் செய்து விவசாயம் செய்யக்கூடியதாக இருக்கின்றன எனக்குறிப்பிட்ட அவர் சில குளங்கள் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
குளங்களை அடையாளப்படுத்தி எல்லையிடும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.