ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் உள்ள காணிகளை வாழ்வாதார பயிர்செய்கைக்காக தாருங்கள்..

கிளிநொச்சி ஆணைவிழுந்தான் குளத்தினை புனரமைத்து அதன் கீழ் உள்ள விவசாய நிலங்களை விடுவித்து தமது வாழ்வாதாரப் பயிர்செய்கைகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள ஆனைவிழுந்தான் கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள் ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை தமது விவசாய செய்கைகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதாவது, கடந்த 1983ம் ஆண்டு மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி குளத்தினை புனரமைத்;து குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்ற போதும், இதுவரை குறித்த மக்களின் கோரிக்;கைகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
இது தொடர்பில் கருத்துதெரிவித்த கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் அவர்கள் கடந்த ஆண்டில் ஆனைவிழுந்தான் குளத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கு 14 மில்லியன் ரூபா நிதி கிடைத்தது. அதாவது மதிப்பிPடுகள் தயாரிக்கப்பட்டு கடந்த வருட இறுதியில் குறித்த நிதி விடுவிக்கப்பட்டது.
அதாவது 5 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட அபிவிருத்தி வேலைகளுக்கான கேள்வி கோரல்கள் கமநலஅபிவிருத்தி திணைக்களமே மேற்கொள்கின்றது.
இதற்கான நிதி கடந்த நவம்பர் மாதம் கிடைக்கப்பெற்றமையால் கேள்வி கோரல்களுக்கு இரண்டு மாதங்கள் தேவை. ஆதனால் அதனை செய்யமுடியாது போயுள்ளது.
இவ்வருடமும் இதற்கான தேவையை விண்ணப்பித்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் குறித்தநிதியை விடுவித்து தருவதன் மூலம் விரைவாக புனரமைக்கமுடியும்.
குறித்த குளத்தி புனரமைப்புகள் தொடர்பில் வனவளத்திணைக்களம் தடையாக இல்லை. விவசாயிகள் கோருகின்ற வயல்காணிகளை விடுவிப்பதற்கு வனவளத்திணைக்களத்தின் அனுமதிகள் பெறப்படவேண்டியுள்ளது என்றும் அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.