SuperTopAds

தட்டுவன்கொட்டி கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் 60 வீதம் பூர்த்தி...

ஆசிரியர் - Editor I
தட்டுவன்கொட்டி கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் 60 வீதம் பூர்த்தி...

கிளிநொச்சி மாவட்டத்தில்தட்டுவன்கொட்டி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கான வேலைத்திட்டங்கள் 60வீத முன்னேற்றம் அடைந்திருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகத்தினை நிரந்தரமாக மேறn;காள்ளம் பொருட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 76 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் விநியோகத்திற்கான குழாய்கள் பொருத்துகின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ஆனையிறவு, உமையாள்புரம், தட்டுவன்கொடடி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்டோர் தமக்கான குடிநீரை

பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் இதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் 60 வீத வேலைத்திட்டங்கள் நிறைவு பெற்றிருப்பதாகவும் மேற்படி தேசிய நீர வழங்கால் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்;கப்பபட்டுள்ளது.