பசிபிக் கடல் நடுவே பிரமாண்ட தீவு!! -கண்டுபிடித்த கூகுள் வரைபடம்-
கூகுள் வரைபடத்தின் மூலம் பசிபிக் பெருங்கடலில் காணப்பட்ட கருந்துளை ஒரு தீவு என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 1820 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த கடலோடிகள், டஹிட்டி என்ற இடத்தின் அருகில் தீவு ஒன்றினைக் கண்டறிந்தனர். அதற்கு தாங்கள் வந்த கப்பலின் பெயரான வோஸ்டாக் என்ற பெயரைச் சூட்டினர். அதன் பின்னர் மனிதர்களற்ற அந்தத் தீவைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூகுள் மேப்பில் பசிபிக் கடலின் நடுவே பிரமாண்டமான கருந்துளை காணப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள் அந்தத் துளை வோஸ்டாக் தீவு என்பதை உறுதி செய்தனர். அடர் பச்சை பிசோனியா மரங்களால் மூடப்பட்டிருப்பதால் கருந்துளை போலக் காட்சியளித்ததாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.