SuperTopAds

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் நாய்களுக்கு விசர் நாய் தடுப்பூசி...

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் நாய்களுக்கு விசர் நாய் தடுப்பூசி...

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் இவ்வாண்டு பன்னிரண்டாயிரம் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சை என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கபபட்டுள்ளது.

 தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவற்றைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளநிலையில் இதுதொடர்பில் கருத்துததெரிவித்த மேற்படி திணைக்;களம் கடந்த வருடம் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்து தொடர்பில் சில சட்டவிடயங்கள் உள்ளுராட்சி சபைகளிலும் அவற்றுக்கான தடுப்பூசிகளும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளும் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டன.

இவ்விடயங்களில் கடந்த பல ஆண்டுகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என்ற தோற்றப்பாடுகளையடுத்து கடந்த வருடம் அமைச்சரவை முடிவின் படி மேற்படி செயற்பாடுகள் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச்மாதம் முதல் நாய்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றுகின்ற நடவடிக்கையை முற்றுமுழுதாக மேற்படி திணைக்களம் பொறுப்பேற்றுக்கொண்டு முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரத்து ஐநூறு நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு கருத்தடை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் பன்னிரண்டாயிரம் நாய்களுக்க தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு மேற்படி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கபபடவுள்ளதாகவும் அடுத்து வரும் பன்னிரண்டு வருடங்களிற்குப்பின்னர் கட்டாக்காலி நாய்களின் தொல்லை இருக்காது என்றும் நாய்களை பணத்திற்கு வாங்குகின்ற ஓர் நிலமை ஏற்படும் என கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.