SuperTopAds

கிளிநொச்சி பொதுநூலக வசதிகளை கரைச்சி பிரதேச சபை மேம்படுத்தவில்லை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பொதுநூலக வசதிகளை கரைச்சி பிரதேச சபை மேம்படுத்தவில்லை..

கிளிநொச்சி நகருக்கான பொதுநூலகத்தின் வசதிகளை விருத்தி செய்வதற்கு  பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் இயங்கி வருகின்ற கிளிநொச்சி பொதுநூலகம் ஸ்கந்தபுரம் பொதுநூலகம் என்பவற்றின் அடிப்படை வசதிகள்கூட பூர்த்தி செய்யப்படாத நிலை காணப்படுவதாகவும் இதனால் வாசகர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கிளிநொச்சி நகரத்தில் இருக்கின்ற பொதுநூலகம் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது.

குறித்த நூலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணைய சேவை செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

அதாவது, நகரத்திலுள்ள அதிக வாசகர்களைக் கொண்ட இந்த நூலகம் இவ்வாறு காணப்படுகின்றதனால் இதனூடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாசகர்கள் பெரும் அசெகளரியங்குள்ளாகி வருகின்றனர்.