SuperTopAds

மகளை பாலியல் கும்பலிடம் விற்ற காதலன்!! -கொலை செய்து உடலை கார் ‘டிக்கி’யில் மறைத்த பெண்ணின் தந்தை-

ஆசிரியர் - Editor II
மகளை பாலியல் கும்பலிடம் விற்ற காதலன்!! -கொலை செய்து உடலை கார் ‘டிக்கி’யில் மறைத்த பெண்ணின் தந்தை-

அமெரிக்கா நாட்டில் தனது மகளை பாலியல் தொழிலில் செய்யும் கும்பலிடம் விற்ற காதலனை அப்பெண்ணின் தந்தை கொலை செய்து உடலை கார் டிக்கிக்குள் மறைத்து வத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நாட்டின் வாஷிங்டன் மாகாணம் ஸ்போகெனி நகரை சேர்ந்தவர் 60 வயதான ஜான் இசென்மன் என்பவரின் மகள் அரோன் சோரன்சன் என்ற 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

ஆனால், அரோன் சோரன்சன் பணத்திற்காக தனது காதலியை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். சியாட்டல் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டும் கும்பலிடம் தனது காதலியை 1,000 அமெரிக்க டொலருக்கு அரோன் கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளார்.   

தனது மகள் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கியதை அறிந்த அவரின் தந்தை அங்கு சென்று பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கிய தனது மகளை பாதுகாப்பாக மீட்டுள்ளார். தனது மகளை பாலியல் தொழில் கும்பலிடம் விற்றது அவரது காதலன் தான் என்பதையும் தந்தை கண்டுபிடித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த ஜான் தனது மகளின் காதலனான அரோன் சோரன்சனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரில் கடத்திச்சென்றுள்ளார். ஸ்போகெனி நகருக்கு வெளியே காட்டுப்பகுதிக்குள் காரை நிறுத்திய ஜான், அரோன் சோரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

அப்போது, ஜான் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் அரோனை குத்தியும், கிழே கிடந்த கல்லை ஜானின் தலையில் போட்டும் கொலை செய்தார். அரோன் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை காரின் ‘டிக்கி’க்குள் அடைத்துவைத்துவிட்டு காரை ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்திய ஜான் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அந்த கார் பல மாதங்களாக அதேப்பகுதியில் நின்றுள்ளது.

இந்நிலையில், நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக நின்றுகொண்டிருந்த காரை கடந்த மாதம் சில இளைஞர்கள் ஆய்வு செய்தனர். 

அப்போது, அந்த காருக்குள் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் காரின் டிக்கிக்குள் இருந்த மனித எலும்புக்கூடு அரோன் சோரன்சனின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொலிஸ் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் ஜான் இசென்மன் தாமாக சென்று பொலிஸாரிடம் சரணடைந்தார்.