SuperTopAds

சீனாவில் கடும் உணவுக்குத் தட்டுப்பாடு!! -அத்தியாவசிய பொருட்களை சேமிக்க பணிப்பு-

ஆசிரியர் - Editor II
சீனாவில் கடும் உணவுக்குத் தட்டுப்பாடு!! -அத்தியாவசிய பொருட்களை சேமிக்க பணிப்பு-

சீனா மக்கள் அவசரகால நிலைமைகளின்போது, அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அந்நாட்டின் வர்த்தக அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எவ்வித காரணமும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்க நிலை மற்றும் சீரற்ற காலநிலையால் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால், மரக்கறி விநியோகம் தொடர்பான கரிசனைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், விநியோக செயற்பாட்டை சீராக முன்னெடுத்து, விலையை நிலையாகப் பேணுமாறு, உள்ளூர் அதிகாரிகளிடம் அந்நாட்டு வர்த்தக அமைச்சு கோரியுள்ளதாகத் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.