காபூல் தாக்குதலை பொறுப்பேற்றது ஐ.எஸ்!!
ஆப்கான் காபூலில் உள்ள இராணுவ வைத்தியசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியசாலையில், நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 50 பேரளவில் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர், அங்கு நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.