தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இந்திய பிரதமருக்கு கடிதம் வரைய முடிவு!

ஆசிரியர் - Editor I
தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இந்திய பிரதமருக்கு கடிதம் வரைய முடிவு!

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து இன்று இறுதி செய்யவுள்ளன.

 இந்தக் கடிதத்தினை இறுதி செய்யும் ஒருங்கிணைவுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி அதன் அரசியல் பீடத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக பங்கேற்கப்போவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 எனினும், ஏற்கனவே திட்டமிட்டபடி குறித்த ஒருங்கிணைவுக் கூட்டம் நடைபெறும் என்று ஏனைய அரசியல் கட்சிகளான, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், விக்னேஸ்வரன் சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோரின் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேனும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 இதேவேளை, இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமும் பங்கேற்றுள்ளனர்.

 முன்னதாக, கடந்த 23ஆம் தேதி மெய்நிகர் வழியில் கூடியிருந்த தமிழ் கட்சிகளான, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்.  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணி 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவது என தீர்மானித்திருந்தன.

 இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தபோது அவருக்கு ஏற்பட்ட திடீர் உடலநலக்குறைவினால் அன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்கவில்லை.  எனினும், மேற்படி முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் அதற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் மாவை.சோ.சேனாதிராஜா ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடம் கடந்த வியாழக்கிழமை கூடியது.  இதன்போது குறித்த விடயம் சம்பந்தமாக ஆராயப்பட்டது.  அதில் 13ஐ வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்புவதன் மூலம் சாதக பாதக விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

 குறிப்பாக, இந்தியாவிடத்தில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு பல்வேறு தருணங்களில் தமிழரசுக்கட்சி கோரியுள்ள நிலையில், அதனைப் பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம், தமிழர்களின் அபிலாஷைகளை 13இற்குள்ளேயே அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினர் சுருக்கமாகக் கூடும் விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

 மேலும், இந்தியாவை மையப்படுத்திய கடிதம் வரைவானது தென்னிலங்கையில் மிகக் கடுமையான எதிர்ப்புகள் தோற்றம் பெறுவதற்கு வழிசமைத்துவிடும் என்ற விடயமும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.  இதையடுத்து, குறித்த கட்சிகளின் கூட்டத்தினை பிற்போடுவதெனக் கோருவதென்றும் அவ்வாறில்லை என்றும் விட்டால் பங்கேற்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 இந்நிலையில், குறித்த அரசியல் பீடத் தீர்மானம் தொடர்பாக மாவை.சேனாதிராஜா சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

 அதேபோன்று குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பை விடுப்பதற்கான செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தனைச் சந்தித்தபோது சம்பந்தனும் கூட்டத்தினை சற்று பிற்போடுமாறு கோரியுள்ளதாக தகவல்கள் உள்ளன.

 எனினும், காணாமல் போன நிலையில் தாம் அனைத்து ஏற்பாடுகளையும் திட்டமிட்டபடி ஒருங்கிணைக்கும் கூட்டம் நடத்தப்படும் என்று மற்ற அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

 இதேவேளை, நேற்று முன்தினம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் குறித்த கூட்டம் சம்பந்தமாக வினவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அப்போதும், ஏற்கனவே தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் கவனம் செலுத்தப்பட்ட மேற்கூறிய விடயங்களே சம்பந்தமாக எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு