பாடசாலை கொத்தணி உருவாகுமா..? ஒரு மாவட்டத்தில் 30 மாணவர்கள், 3 ஆசிரியர்கள், அதிபர் உட்பட 34 பேருக்கு தொற்று, 100 பேர் தனிமைப்படுத்தலில்..
அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கும், ஆசிரியர்கள் 3 பேர், அதிபர் ஒருவர் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் மருத்துவர் ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க கூறியுள்ளார்.
ஹொரவப்பொத்தானை - தம்புத்தேகம மற்றும் பதவியா பிரதேசங்களை சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்புடைய 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக
மருத்துவர் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.