சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து பெரும் பேரணி!! -இராணுவம் சுட்டத்தில் 3 பேர் பலி: 38 பேர் காயம்-
சூடானில் கொண்டுவரப்பட்டுள்ள இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் கண்டண பேரணியை நடத்தியுள்ளனர்.
அந்நாட்டில் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமல்படுத்தியது முதல் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனநாயக முறையிலான ஆட்சியை வலியுறுத்தி திரண்ட மக்கள் சாலையில் நின்ற ராட்சத விளம்பர பலகையில் ஏறி சூடான் தேசிய கொடியை பறக்கவிட்டனர்.
போராட்டத்தை கலைக்க இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 38 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.