இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த 13 பேரை சுட்டுக் கொன்ற தாலிபான்கள்!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண விழா ஒன்றில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக 13 பேரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.
ஆப்கான் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சாலே விடுத்துள்ள ரூவிட்டர் பதிவில், நங்கர்ஹர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அறிந்த தாலிபான் 13 பேரைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தாலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், வெறும் கண்டனத்தால் மட்டும் தங்களின் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.