பிழையானவர்களுக்கும், பிழைகளுக்கும் வெள்ளையடிக்கிறதா பல்கலைக்கழக சமூகம்?

ஆசிரியர் - Editor I
பிழையானவர்களுக்கும், பிழைகளுக்கும் வெள்ளையடிக்கிறதா பல்கலைக்கழக சமூகம்?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நானை சகலரும் இணைந்து நினைவுகூரவேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சமூகம் கேட்டிருப்பது பிழையானவர்களுக்கும், அவர்களுடைய பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான முயற்சியாக இருக்குமோ என சந்தேகிக்கிறோம். 

மேற்கண்டவாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகாண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திம். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை சகலரும் இணைந்து செய்யவேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுத்திரு க்கும் கோரிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது, 

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவு நாளை ஒட்டுமொ த்த தமிழ்தேசமும் நினைவுகூரவேண்டும். அதில் எமக்கு மாற்றுக்க ருத்துக்கள் இல்லை. ஆனால் இறுதிவரை இனப்படுகொலைக்கு துணைபோனவர்களும், 

இனப்படுகொலைக்கான விசாரணைகளை முடக்க நினைப்பவர்களும் முள்ளிவாய்க்கால் மண் ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலிகளை செலுத்த வருவார்கள், அவர்க ளுடன் இணைந்து இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களும், 

அதனை கண் முன்னால் கண்டவர்க ளும், நடந்தது இனப்படுகொலை அதற்று நீதி வேண் டும் என கேட்பவர்களும் சேர்ந்து நின்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அபத்தம். 

அப்படியான ஒரு வேலையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி செய்யாது. ஆகவே நடந்தது இனப்படுகொலையே என்பதையும், நடந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என உளமார சிந்திப்பவர்களும் ஒன்றிணைந்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு 

அஞ்சலி செலுத்துவதாக இருந்தால் அத்தகை ஒரு அஞ்சலி நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிச்சயமாக பங்குகொள்ளும். இனப்படுகொலையை செய்யத அரசுக்கு ஒப்பாக நடந் தது இனப்படுகொலை அல்ல என கூறியவர்கள், 

நடந்த இனப்படுகொலைக்கு ஒத்தூதியவர்கள், நடந்த இனப்படுகொலைக்கான நீதி விசார ணையை முடக்க நினைப்பவர்களுடன் சேர்ந்து படுகொலை  செய்யப்பட்ட மக்களுக்கு அஞ் சலி செலுத்த மாட்டோம். 

மேலும் பல்கலைக்கழக சமூகத்தின் சகல நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எங்களால் முடிந்தளவு ஒத்தாசை செய்கிறோம். எல்லாவற்றுக்கும் மேல் அவர்களை நாம் மதிக்கிறோம். 

ஆனால் இந்த நினைவுகூரல் தொடர்பாக எங்களுடன் ஒன்றுமே பேசப்பட வில்லை. எங்களுடைய கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. ஆகவே பிழையான சிலருக்கும், அவர்களுடைய பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருக்குமோ? 

என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு