5 – 11 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி!!
அமெரிக்காவில் 5 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த முடிவிற்கு அந்நாட்டின் உணவு மற்றும் ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, பைஸர் தடுப்பூசியை 5 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்றுவதற்கான அவசர பயன்பாட்டு அனுமதியை, இன்னும் சில வாரங்களுக்குள் வழங்குவதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளது.