வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு!
மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று (26) காலை 10.30 மணியளவில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெரும் போகத்திற்காக 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையிலே முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் 11 ஆம் கட்டை துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் என்.யோகராஜா,முருங்கன் கட்டுக்கரை குளம் நீர் பாசன பொறியியலாளர் பி.அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.