வெளிநாட்டுப் பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகள் நீக்கம்!! -புதிய அறிவிப்பை வெளியிட்ட பைடன்-

ஆசிரியர் - Editor II
வெளிநாட்டுப் பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகள் நீக்கம்!! -புதிய அறிவிப்பை வெளியிட்ட பைடன்-

கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டினருக்கான விமானப் பயணக் கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் முதல் அமெரிக்கா நீக்கவுள்ளதுடன் வெளிநாட்டுக் பயணிகளுக்கான புதிய விதிகளையும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

பயண கட்டுப்பாடுகளை நீக்கும் புதிய பிரகடனத்தில் நேற்று ஜனாதிபதி பைடன் கையெழுத்திட்டார். பயணிகள் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், அவர்கள் தொற்று நோய்க்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதை விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் நவம்பர் 8 முதல் அமலுக்கு வருகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு