மன்னார் காற்றழுத்த மின்னுற்பத்தி பகுதிக்கு விஜயம்-அதானி குழுமம்!
கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானியின் மகன் மற்றும் அதானி குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் இன்று(25) திங்கட்கிழமை மாலை மன்னார் காற்றழுத்த மின்னுற்பத்தி பகுதிக்கு விஜயம் செய்தனர்.
அதானி குழு நிறுவனம்,கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையில் அபிவிருத்திப் பணிகளுக்கு மேலதிகமாக இந்த நாட்டின் எரிசக்தி மீள் உற்பத்தி திட்டம் குறித்தும் அவதானத்தை திருப்பியுள்ளது.
மேலும் அதானி குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்து இது பற்றி பேசியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் காற்றழுத்த மின் உற்பத்தி திட்டத்திலுள்ள மின்சார சபைக்குச் சொந்தமான மிகப்பெரிய உற்பத்தி நிலையம் மன்னாரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விஜயத்தில் விமான மற்றும் முதலீட்டு இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்கவும் பங்கேற்றிருந்தார்