ரோஹிஞ்யா என்ற பெயரை தனது உரையில் குறிப்பிடாத போப் பிரான்சிஸ் !
அனைவரின் மனித உரிமைகளும் மதிக்கப்படுவதோடு, அனைத்துப் பிரிவினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என போப் பிரான்சிஸ்போப் வலியுறுத்தியுள்ளார்.
மியன்மாருக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதிபர் மாளிகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (28.11.2017) நடைபெற்ற நிகழ்விலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி கலந்துகொண்டார்.
இராணுவ அடக்குமுறை காரணமாக சுமார் ஆறு இலட்சம் ரோஹிஞ்யாக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சமடைந்து, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போப் பிரான்சிஸின் மியன்மார் பயணம் இடம்பெற்றுள்ளது.
ரோஹிஞ்யாக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை மறைமுகமாகக் குறிப்பிட்டாலும், ரோஹிஞ்யா என்ற பெயரை தனது உரையில் போப் பிரான்சிஸ் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.