கிளிநொச்சி மாவட்டத்தில் நாய் கடிக்கு இலக்காவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகள் மற்றும் பொது வைத்தியசாலை வளாகம் கிளிநொச்சி நகரம் ஆகிய பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதுடன் நாய்க்கடிக்கு இலக்காகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ள பாடசாலைகள் மற்றும் பொதுஇடங்கள் பொதுவைத்தியசாலை வளாகம்ஆகியவற்றில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.
இவ்வாறு நாய்களின் பெருக்கம் அதிகரித்துக்காணப்படுவதால் நாய் கடிக்கு இலக்காகுவோர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதுடன், விபத்துக்களும் இடம்பெறுகின்றன.
பாடசாலைகளில் மதிய உணவு வழங்கப்படுவதனால் மீதியான உணவுகளை மாணவர்கள் கொட்டுவதனால் பாடசாலைகளில் அதிகளவான தெருநாய்கள் ஒன்று சேருகின்றன.
இவ்வாறு கிளிநொச்சி நகரத்திலும் பொதுவைத்தியசாலை வளாகம் பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக்;காணப்படுகின்றது.
இக்கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க நிர்வாகம் மற்றும் மாவட்ட பொதுஅமைப்புக்கள் கோரியுள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டிலே ஐயாயிரத்து 633 பேரும், 2017ம் அண்டில் பதினோராயிரத்து 800 பேரும், இந்த ஆண்டின் கடந்த இரு மாதங்களில் 789 பேரும், இவ்வாறு நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேற்படி கட்டாக்காலி நாய்களால் நாய்கடிக்கு உள்ளாவோர் வருடாந்தம் அதிகரித்து வருகின்றமையும் மேற்படி அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.