SuperTopAds

மக்களின் காணிகளை விடுவிக்க 800மில்லியன் கேட்கும் படையினர்..

ஆசிரியர் - Editor I
மக்களின் காணிகளை விடுவிக்க 800மில்லியன் கேட்கும் படையினர்..

வடமாகாணத்தில் படையினர்வசம் உள்ள ஒருதொ குதி காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு 80 0 மில்லியன் ரூபாய் நிதியை படையினர் கோரியுள் ளதுடன் மன்னார் முள்ளிக்குளம் காணியை விடிவி க்க நிதி கிடைக்கவில்லை எனவும் படையினர் கூறி யுள்ளனர்.

வடக்கு  மாகாணத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பில் சகல மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், மாவட்டச் செயலாளர்கள், படைத் தளபதிகள் , வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் , வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் , மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர்  கலந்துகொண்ட குறித்த சந்திப்பில் படையினரால் இதுவரை விடுவிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் தற்போதும் படைவசமுள்ள நிலங்கள் இதில் படையினரால் விடுவிப்பதாக இணக்கம் காணப்பட்ட நிலங்கள் தொடர்பில் மாவட்ட ரீதியில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் வலி. வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளையும் விடுவிக்கும் நோக்கில் அங்கிருக்கும் படை நிலைகளை இடமாற்றம் செய்வதற்கான நிதியாக மேலும் 800 மில்லியன் ரூபாவிற்கு அடுத்த அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு  அதற்கான பணிகள் முன்னெடுத்து அடுத்த கட்ட திலவிடுவிப்பு இடம்பெறும் எனவும். 

மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் பகுதியில் 26 வீடுகளுடன்கூடிய நிலங்களை விடுவிக்கவும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தபோதும் அதற்கான மாற்று ஏற்பாட்டிற்கான நிதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்ததோடு இந்த வீடுகளிற்குப் பதிலாக வீட்டின் உரிமையாளர்களிற்கு ஏற்கனவே கடற்படையினரால் அமைத்து வழங்கப்பட்ட வீடுகளை மீளப்பெறவேண்டும் எனவும் கோரினர்.

அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதேநேரம் வட்டு வாகல் கடற்படை முகாம் அமைந்துள்ள நிலத்தில் 200 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்கள் கடற்படையினருக்கு வழங்கவும் கேப்பாபுலவில் இருவரும் படையினருக்கே வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் படைத் தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்பில் படைத் தலமையகம் அமைந்துள்ள நிலப் பரப்பில் 75 ஏக்கர் நிலத்தினை விடுவிக்க முடியாது எனவும் படைத் தரப்பு சுட்டிக்காட்டினர். இதனால் இங்கே உள்ள மக்களிற்குச் சொந்தமான நிலங்களை சரியாக உடன் இனம் கண்டு அதனை விடுவிப்பதில் உள்ள நடைமுறைகள் தொடர்பில் ஆராய்து ஒரு மாத காலத்தினுள்  அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்களிற்குச் சொந்தமான உறுதிக் காணிகளில் இன்னமும் 4 ஆயிரத்து 599 ஏக்கர் நிலம் படை வசமுள்ளது. இதில் 4 ஆயிரத்து 201 ஏக்கர் நிலம் வலி. வடக்குப் பகுதியில் மட்டும் உள்ளதோடு குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் எஞ்சிய 398  ஏக்கர் நிலமும் படை வசமுள்ளதாகவும் இதில் குடாநாடு முழுமையாக 2 ஆயிரத்து 900 ஏக்கர் நிலம் இராணுவத்தினரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.