பொலிஸ் நிலையத்தில் சரணடைவதற்கு சென்ற 5 இளைஞர்களை மோதி தள்ளிய டிப்பர்! பொலிஸ் நிலைய வாசலில் நடந்த சம்பவம் சினிமா பாணியில் திட்டமிடப்பட்டதா..?

ஆசிரியர் - Editor I
பொலிஸ் நிலையத்தில் சரணடைவதற்கு சென்ற 5 இளைஞர்களை மோதி தள்ளிய டிப்பர்! பொலிஸ் நிலைய வாசலில் நடந்த சம்பவம் சினிமா பாணியில் திட்டமிடப்பட்டதா..?

மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைவதற்கு சென்றிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் 5 பேர் காயமடைந்திருக்கின்றனர். 

இன்றைய தினம் சனிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீதே டிப்பர் மோதியுள்ளது. 

குறித்த சம்பவம் தற்செயலான சம்பவமா? அல்லது திட்டமிடப்பட்ட சம்பவமா? என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதுடன், 

தப்பி ஓடியுள்ள டிப்பர் வாகனத்தையும், சாரதியும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

சில தினங்களுக்கு முன்னதாக இடம் பெற்ற முரண்பாடு சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொண்டு சரணடைய சென்ற ஐந்து இளைஞர்களே 

பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நன்கு திட்டமிடப்பட்ட விபத்து எனவும் விபத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் 

பண பலத்தை பயன்படுத்தி விபத்துக்கான காரணத்தை திசை திருப்பபடுவதற்கான வாய்புக்கள் அதிகம் இருப்பதால் பொலிஸார் உரிய விதத்தில் 

விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமா பாணியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவே முறைப்பாடு செய்து சரணடைய சென்றவர்கள் மீது விபத்தை ஏற்படுத்திய சம்பவம் 

மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு